Wednesday, September 25, 2024

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

இந்தியாவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ. 38 உயர்ந்து ரூ.1,855 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வழக்கமாக உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்தவகையில் மாதத்தின் முதல்நாளான இன்று (செப். 1) வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

ரத்தமும் தக்காளிச் சட்னியும் அதிகார பீடங்களும்!

அதன்படி, சென்னையில் வியாழக்கிழமை (செப்டம்பர் 1) வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை ரூ. 38 உயா்ந்து, ரூ.1,855-க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதம் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 7.50 அதிகரித்தது, இந்த மாதம் ரூ. 38 உயர்ந்துள்ள நிலையில், உணவு விடுதி, அடுமனை, தேநீர் கடை உள்ளிட்ட தொழில் சாா்ந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024