Sunday, October 27, 2024

வார்னர் திரும்ப விளையாடுவாரா? கம்மின்ஸ் கூறியதென்ன?

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

37 வயதான வாா்னா் டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்றார். இந்திய அணி கோப்பையை வென்றது.

கடந்த 2009-இல் அறிமுகமான வாா்னா், டி20யில் 110 ஆட்டங்களில் 3,277 ரன்களையும், 112 டெஸ்ட் ஆட்டங்களில் 8,786 ரன்களையும், 161 ஒருநாள் ஆட்டங்களில் 6932 ரன்களையும் விளாசியுள்ளாா்.

கடந்த 2020- 2021 தொடரில் பார்டர் கவாஸ்கர் கோப்பையில் 2-1 என இந்தியா வெற்றி பெற்றது. வரும் நவ.22ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறவும் தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில், பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மிகவும் கலகலப்பாக அதேவேளையில் தெளிவாகவும் இது குறித்து பேசியுள்ளார்.

பாட்காஸ்ட் நிகழ்ச்சியில்கம்மின்ஸ் பேசியதாவது:

சில நாள்களுக்கு முன்பாக நான் டேவிட் வார்னருடன் பேசினேன். இந்தச் சம்பவம் குறித்து முதலில் யார் பேச்சினை தொடங்கினோம் எனத் தெரியவில்லை. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என வார்னர் என்னிடம் கேட்டார். அதற்கு நான் ‘பிக்பேஸ் தொடரில் சிட்னி தண்டர் அணிக்கு வாழ்த்துகள்’ எனக் கூறினேன். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே?

செய்தித்தாள்களில் கடைசிப் பக்கத்தில் இருக்க டேவிட் வார்னர் கவலைப்படமாட்டார் என நினைக்கிறேன். நாங்கள் டேவிட் வார்னரை நேசிக்கிறோம். ஆனால், அவர் ஓய்வு பெற்றுவிட்டார். மன்னிக்கவும் நண்பா.

2018-19க்கு முன்பு மிகவும் மோசமாக இருந்தது. ஏனெனில் அனைத்து தொடர்களிலும் தோல்வியை சந்தித்தோம். ஆனால், 2020-21இல் சிறப்பாக போட்டியிட்டோம். காப்பாவில் இந்தியா சிறப்பாக விளையாடி வென்றாலும் நாங்களும் நன்றாகவே போட்டியிட்டோம் என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024