வாழைப்பழப் பெட்டிகளில் ரூ.930 கோடி கொக்கைன் கடத்தியவர்களுக்கு சிறை!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

வாழைப்பழப் பெட்டிகளில் ரூ.930 கோடி கொக்கைன் கடத்தியவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவில் இருந்து 100 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 930 கோடி ரூபாய்) மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை வாழைப்பழப் பெட்டிகளில் கடத்திச் செல்ல சதித்திட்டம் தீட்டிய ஸ்காட்லாந்து கும்பலுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் டோவரில் எல்லைப் பாதுகாப்புக் குழுக்களால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை கடத்தத் திட்டமிட்டதாக ஜேமி ஸ்டீவன்சன் என்பவர் ஒப்புக்கொண்டதன் பேரில் கைது செய்யப்பட்டார்.

ஜேமி ஸ்டீவன்சன், கென்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து ‘ஸ்ட்ரீட் வேலியம்’ என்றழைக்கப்படும் பல நூறு கோடி மதிப்பிலான எடிசோலம் மாத்திரைகளை ஸ்காட்லாந்திற்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தார்.

இதையும் படிக்க: விவசாயிகளின் எதிர்ப்புக்குள்ளாகும் பாஜக வேட்பாளர்கள்!

59 வயதான ஜேமி ஸ்டீவன்சன், தெற்கு லானார்க்ஷயரில் உள்ள ரூதர்க்லனைச் சேர்ந்தவர். இவர் ஸ்காட்லாந்தில் அதிக குற்றங்கள் செய்யக்கூடிய முன்னணி நபராகவும் இருந்தவர்.

இவர் தொலைக்காட்சித் தொடரான ​​ ‘தி சோப்ரானோஸில்’(The Sopranos) வரக்கூடிய மாஃபியா தலைவரான டோனி சோப்ரானோவுக்கு இணையாகக் கருதப்பட்டார்.

மேலும் 2022 ஆம் ஆண்டில், அவர் இங்கிலாந்தின் அதிகம் தேடப்படக்கூடிய மோசமான 12 குற்றவாளிகளின் பெயர் பட்டியலிலும் இடம்பிடித்திருந்தார்.

இதையும் படிக்க: காந்தி இன்று உயிரோடு இருந்திருந்தால்… ப. சிதம்பரத்தின் கேள்விகள்!

கடந்த மாதம் ஸ்டீவன்சன் எடிசோலத்தை தயாரித்து சப்ளை செய்ததில் மற்றும் ஒரு டன் கொக்கைன் கடத்தலில் தனது பங்கை ஒப்புக்கொண்டார்.

இந்தச் சம்பவத்தில் டேவிட் பில்ஸ்லேண்ட்(68), பால் போவ்ஸ்(53), ஜெரார்ட் கார்பின் (45), ரியான் மெக்பீ (34), மற்றும் லாயிட் கிராஸ் (32) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கார்பினுக்கு ஏழு ஆண்டுகளும், பில்ஸ்லேண்ட், போவ்ஸ் மற்றும் கிராஸ் ஆகியோருக்கு ஆறு ஆண்டுகளும், மெக்பீக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதையும் படிக்க:ஜார்க்கண்ட் சென்ற பிரதமரிடம் காங்கிரஸ் 3 கேள்விகள்!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024