வாழ்வது இவ்வளவுதான்… ஆனா ரூ.7,000 கோடி டெபாசிட் இருக்கு!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

ஆசியாவின் பணக்கார கிராமம் இதுதான் – இந்தியாவில் தான் இருக்கு தெரியுமா?ஆசியாவின் பணக்கார கிராமம் இதுதான் - இந்தியாவில் தான் இருக்கு தெரியுமா?

கிராமம் என்றால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, அங்கு பெரும்பாலான அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகள்தான். அங்கு வாழும் மக்கள் ஏழ்மையில் இருப்பதையும் பார்க்க முடியும். ஆனால் மாதாபர் என்ற பெயரைக் கேட்டால் உடனடியாக அந்த எண்ணம் மாறிவிடும். இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மதாபார் கிராமம் ஆசியாவிலேயே பணக்கார கிராமங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இந்த கிராமத்தில் 7,600 குடும்பங்களுக்கு எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, பிஎன்பி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ, யூனியன் வங்கி என 17 வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் கிராம மக்களும் அதிக அளவில் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அங்கு சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை தங்களது கிராமத்தில் இருக்கும் வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள்.

விளம்பரம்

பெரிய பங்களாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கி வைப்புத்தொகையுடன், ஒரு பெரிய நகரத்திற்கு போட்டியாக கிராம கட்டிடக்கலை உள்ளது. முன்னணி மாவட்ட வங்கி மேலாளரிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, மதாபார் கிராமத்தில் உள்ள 17 வங்கிக் கிளைகளில் மொத்தம் ரூ.7,000 கோடியை நிரந்தர டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 20,000 குடும்பங்கள் இருந்தாலும், அதில் பெரும்பாலான குடும்பத்தினர் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் வறுமை இல்லை என்று பலர் நினைக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மதாபாரில் நவாஸ், ஜூனாவாஸ் பகுதிகளில் மொத்த மக்கள் தொகை 38 ஆயிரமாக இருந்தது, இன்று அது சுமார் 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது என கிராமத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தளவுக்கு மக்கள் தொகை கொண்ட இக்கிராமத்தில் இன்று 1,711 குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றன.

விளம்பரம்

இதையும் படிங்க:
கடனுக்கான EMI கட்டத் தவறினால் என்னாகும் தெரியுமா? சட்டம் சொல்வது என்ன?

அரசாங்க புள்ளி விவரங்களின்படி, மதாபாரின் நவாஸ் மற்றும் ஜுனாவாஸ் பகுதிகளில் மொத்தம் 1,224 குடும்பங்கள் பிபிஎல் கார்டுகளை வைத்துள்ளன. அதே சமயம் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் 487 குடும்பங்கள் பயனடைகின்றன. இந்த 1,224 பிபிஎல் கார்டுகளால் 6,449 பேரும், அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தில் 2,007 பேரும் பயனடைந்து வருகின்றனர்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கான இந்த வசதி மூலம், மதாபார் கிராமத்தில் 8,456 ஏழைகள் இருப்பது தெரியவந்தது. மதாபாரில் உள்ள மக்களின் பொருளாதார நிலையில் இவ்வளவு பெரிய வித்தியாசம் இருப்பது குறித்து அந்த கிராமத்தின் தலைவர் அர்ஜன் ஃபுடியாவிடம் கேட்டபோது, ​​இந்த ஏழைக் குடும்பங்கள் பெரும்பாலும் வெளியில் இருந்து வந்து மதாபாரில் குடியேறியதாகக் கூறினார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bank
,
Richest People in India
,
Trending News
,
village
,
Viral News

You may also like

© RajTamil Network – 2024