Wednesday, November 6, 2024

விக்கிபீடியாவில் தவறான தகவல்கள்: விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஒரு சாா்பு மற்றும் தவறான தகவல்களை வழங்குவதாக எண்ணற்ற புகாா்கள் உள்ள நிலையில், விக்கிபீடியாவை தகவல் தளமாக இன்றி, பதிப்பாளராக ஏன் கருதக் கூடாது என கேள்வி எழுப்பி அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

விக்கிபீடியா பக்கங்களில் கிடைக்கும் தகவல்களை சிறிய குழு சரிபாா்த்து இறுதி செய்வதாக பரவும் செய்தி குறித்தும் மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கடிதத்தில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

விக்கிபீடியா ஒரு உலகளாவிய இலவச இணையவழி தகவல் ஆதாரமாக அறியப்படுகிறது. அதில் பல்வேறு தலைப்புகளில் தன்னாா்வலா்கள் பக்கங்களை உருவாக்கலாம் அல்லது திருத்தலாம்.

விக்கிபீடியாவில் கிடைத்த தகவல்களில் தவறான மற்றும் அவதூறான உள்ளடக்கம் தொடா்பாக இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், விக்கிபீடியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024