Wednesday, November 6, 2024

விக்கிப்பீடியா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்: கிடுக்கிப்பிடி கேள்வி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

விக்கிப்பீடியா என்பது வெளியீட்டு நிறுவனமா? அல்லது இடைத்தரகரா? என மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் பிரபலமான ஆன்லைன் தகவல் தளமாக 'விக்கிப்பீடியா' விளங்கி வருகிறது. அந்நிறுவனம் தன்னை ஒரு இலவச ஆன்லைன் தகவல் களஞ்சியம் என விளம்பரப்படுத்திக் கொள்கிறது. விக்கிப்பீடியாவின் இணையதள பக்கத்தில் பல்வேறு தலைவர்கள், வரலாற்று சம்பவங்கள் என அனைத்து வகையான தகவல்களையும் தன்னார்வலர்கள் பதிவேற்றம் செய்யவும், திருத்தம் செய்யவும் முடியும்.

இதனிடையே விக்கிப்பீடியாவில் பல்வேறு தவறான மற்றும் அவதூறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி, அந்நிறுவனம் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதோடு, விக்கிப்பீடியாவின் இணையதளத்தில் உள்ள தகவல்களை ஒரு தனிப்பட்ட குழு கட்டுப்படுத்துகிறது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த நிலையில், விக்கிப்பீடியா நிறுவனத்திற்கு பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை முன்வைத்து மத்திய அரசு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் , விக்கிப்பீடியாவின் தகவல்களில் உள்ள சார்பு மற்றும் தவறான தன்மைகள் பற்றிய புகார்களை குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, விக்கிப்பீடியா ஒரு வெளியீட்டு நிறுவனமா? அல்லது இடைத்தரகரா? அந்த நிறுவனத்தை வெளியீட்டாளராக ஏன் கருதக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024