Friday, September 20, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் யார்? – எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

சென்னை,

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த 10-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்.அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.விக்கிரவாண்டி தொகுதியில் பாஜக கூட்டணியில் பா.ம.க வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024