Friday, September 20, 2024

விஜய்யின் கட்சிக்கொடியில் இடம்பெறும் சின்னம் குறித்து புதிய தகவல்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கொடியில் வாகை மலர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் வேகம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கட்சி தொடங்கிய பின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. மாநாடு நடத்துவதற்காக ஆயத்த பணிகளில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைக்கும் வண்ணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், த.வெ.க. கட்சிக்கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வாகை என்றால் வெற்றி என்ற அடிப்படையில் த.வெ.க. கட்சிக்கொடியில் வாகை மலர் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் என்றால் வெற்றி என்ற அடிப்படையிலும் வாகை மலர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பண்டைய காலங்களில் போரில் வென்ற மன்னர்களுக்கு வாகை மலர் சூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024