Wednesday, September 25, 2024

விண்டோஸ் பிரச்சினையால் சில வங்கிகளில் மட்டுமே சிறிய பாதிப்பு – ரிசர்வ் வங்கி

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

புதுடெல்லி,

மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம் இன்று மதியம் திடீரென முடங்கியது. இதனால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக, விமான துறை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன.

இந்த நிலையில், விண்டோஸ் பிரச்சினையால் சில வங்கிகளில் மட்டுமே சிறிய பாதிப்பு ஏற்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மேலும் தெரிவிக்கையில், "மைக்ரோசாஃப்ட் பிரச்சினையால் இந்தியாவில் 10 வங்கிகளில் மட்டுமே சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

((CrowdStrike))கிரவுட்ஸ்டிரைக் பயன்படுத்தியதால் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் செயலிழப்பில் ஒட்டுமொத்தமாக இந்திய நிதித்துறை பெருமளவில் பாதிக்கப்படவில்லை. விழிப்புடன் இருக்கவும், செயல்பாட்டை உறுதி செய்யவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது ." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024