Wednesday, September 25, 2024

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் எதிர்நோக்கும் சவால்கள்..

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் பூமி திரும்பவிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 80 நாள்களாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில்தான் பூமிக்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமி திரும்புவார் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், பிப்ரவரி என அறிவிப்பு வெளியாகிவிட்டது.

இதன் மூலம் கிட்டத்தட்ட 9 மாதங்கள் சுனிதா விண்வெளியில் தங்கியிருக்க வேண்டியது ஏற்படலாம். இதனால், அவரது உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதில் சில சரியாகும், சில கவலைதரும் மாற்றங்களாக இருக்கலாம்.

வார்த்தைகளால் பதில் சொல்லி எதிர்பார்த்த வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டாம்: மு.க. ஸ்டாலின்

விண்வெளி என்றால் எல்லாமே மாறுகிறது, அதிலும் குறிப்பாக மனித உடல் என்று எடுத்துக்கொண்டால் முற்றிலும் ஒரு மாறுபட்ட சூழல். புவிஈர்ப்பு விசை இல்லாததால், சுனிதாவின் தசைகளும், எலும்புகளும் தளர்வடையும். எலும்பின் அடர்த்தி குறையும்.

பிப்ரவரி மாதத்தில் அவர் பூமிக்குத் திரும்பியதும், தொடர்ச்சியாக அவர் உடல்நிலையை சீரமைப்பதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதும், உடலுக்கும், பலவீனமடைந்த எலும்புக்கும் பலம் பெறுவதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது வரும் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக, அதிக நாள்கள் விண்வெளியில் தங்கியிருப்பவர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படுமாம், அதாவது, கண்ணில் இருக்கும் நீரின் அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாட்டால் கோளாறு ஏற்பட்டு, சிலருக்கு தற்காலிகமாக பார்வை பறிபோகும் அபாயமும் ஏற்படலாம் என்கின்றன தகவல்கள்.

உடலில் திரவ அழுத்த மாறுபாட்டால், சிலருக்கு கால்கள் சுருங்கியும் தலைகளில் வீக்கமும் ஏற்படும் அபாயமும் உள்ளதாம். விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய மூன்று நாள்களில் இந்த நிலைமை சரியாகும் என்பது எதிர்பார்ப்பு.

இதுபோன்ற பல்வேறு உடல்நல பிரச்னைகளும், உணர்வுப்பூர்வமான மன நலப் பிரச்னைகளும் ஏற்படும் அபாயங்களும் அதிக நாள்கள் விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024