Friday, September 20, 2024

விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி – நாசா தலைவர் தகவல்

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா முன்முயற்சியை நாசா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

வாஷிங்டன்,

விண்வெளியில் இயங்கி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்வதற்கு இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் தலைவர் பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "மனிதகுலத்தின் நலனுக்காக முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா முன்முயற்சியை நாசா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. விண்வெளியில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை நாங்கள் ஒன்றாக விரிவுபடுத்துகிறோம். அதன் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல இஸ்ரோ விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024