Monday, September 23, 2024

வினேஷ் போகத் செய்யாததை என் மகள் செய்வாள்: மஹாவீர் போகத்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

புது தில்லி: ஒலிம்பிக் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், அரசியலில் நுழைந்திருப்பதற்கு, முன்னாள் மல்யுத்த பயிற்சியாளரும், வினேஷ் போகத்தின் உறவினருமான மஹாவீர் சிங் போகத், எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மஹாவீர் போகத் இது பற்றி கூறுகையில், எனது கனவை நனவாக்கும் முயற்சியில் என் மகள் சங்கீதா போகத் இறங்கியிருக்கிறார், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்ஜலீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக அவருக்கு இப்போதே பயிற்சி அளிக்கத் தொடங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்தப் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய வினேஷ் போகத், தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவர், டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரரும், சங்கீதாவின் கணவருமான பஜ்ரங் புனியாவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

சொகுசு வீடுகளாக மாறும் நட்சத்திர ஹோட்டல்! கட்டடத்தை இடிப்பதில் இத்தனை சவாலா?

தொடர்ந்து, ஹரியாணா மாநிலம், ஜிந்த் மாவட்டம் ஜுலானாவிலிருந்து அவர் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார்.

இது குறித்து முன்னாள் பயிற்சியாளரும், வினேஷ் போகத் உறவினருமான மஹாவீர் போகத் கூறுகையில், வினேஷ், லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முயற்சித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அரசியலில் நுழைந்துவிட்டார், 2028 ஒலிம்பிக் போட்டிக்காக நாங்கள் சங்கீதாவை தயார் செய்து வருகிறோம், இந்தியாவுக்காக அவர் பதக்கம் வெல்வார், ஜந்தர் மந்தர் போராட்டத்தால்தான் தேசிய போட்டிகளை சங்கீதா தவறவிட்டார், பபிதா போகத் உடல்நிலை சரியில்லை, அவர் மீண்டும் வருவது சிரமம் என்று தெரிவித்துள்ளார்.

துரோனாசாரியா விருது பெற்றிருக்கும் மஹாவீர், வினேஷ் போகத் அரசியலில் நுழைந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், அரசியலில் நுழைவது என்பது அவர் மற்றும் அவரது கணவர் சோம்வீரின் முடிவு. எங்களுக்கு அதில் விருப்பம் இல்லை, அவரது முடிவு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை, ஒட்டுமொத்த நாடும் 2028ல் இந்தியாவுக்காக அவர் தங்கம் வென்று வருவார் என்றுதான் எதிர்பார்த்தது, நானும் அதைத்தான் எதிர்பார்த்தேன்.

ஆனால், அவர் அரசியலில் நுழைந்துவிட்டார், அவர் எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ ஆகலாம், ஆனால், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் அது அவரது வாழ்நாள் நினைவாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

ஒலிம்பிக்கில் அவர் அதிருப்தி அடைந்திருந்த போது, அவர் அரசியலுக்கு வருமாறு அழைக்கப்பட்டார், முதலில், அவருக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இருந்திருக்கவில்லை என்றும் மஹாவீர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024