Sunday, September 22, 2024

விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

குரோஷியா வீராங்கனை பெட்ரா மார்டிக் – போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர்.

லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷியா வீராங்கனை பெட்ரா மார்டிக் – போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வியாடெக் 6-3,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

You may also like

© RajTamil Network – 2024