வில்வித்தை உலகக் கோப்பை: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

இந்திய பெண்கள் அணி எஸ்டோனியா அணியை 232 – 229 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

ஆண்டலியா,

துருக்கியில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-3) நடைபெற்று வருகிறது. இதில் காம்பவுண்ட் பிரிவில் 3 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி எஸ்டோனியா அணியை 232-229 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

உலகின் நம்பர் ஒன் காம்பவுண்ட் பிரிவு பெண்கள் அணியாக திகழும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி இணை தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி இணை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முறையே ஷாங்காய் மற்றும் யெச்சியோனில் நடந்த உலகக் கோப்பை ஸ்டேஜ்-1 மற்றும் ஸ்டேஜ் 2 பிரிவுகளிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த இணை ஹாட்ரிக் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024