Sunday, October 20, 2024

விஷ சாராய சம்பவம் எதிரொலி: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சாராயம், மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் அதிரடியாக இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா காணொளி காட்சி வாயிலாக அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிகிறார். மேலும் தமிழ்நாட்டில் விஷ சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அறிவுரைகள் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You may also like

© RajTamil Network – 2024