வீட்டில் எரியும் நெருப்பைத் தடுக்காமல் உக்ரைன் போரைத் தடுக்கச் செல்லும் மோடி: ஒவைசி

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

தெலங்கானாவில் மதரஸாக்கள் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக பாஜக அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார், ஏஐஎம்ஐம் தலைவர் ஒவைசி.

தெலங்கானாவில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் ஒவைசி பேசியதாவது, “மணிப்பூர் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எரிந்து வருகிறது. ஆனால், மோடி என்ன செய்தார்?

இந்த நிலையில், ஜெலென்ஸ்கியுடனான போரை நிறுத்துமாறு, புதினிடம் தேசிய பாதுகாப்பு அமைப்பை அனுப்பியுள்ளார். வீட்டில் நெருப்பு எரிகிறது; அதை தடுத்து நிறுத்துங்கள்.

வீட்டில் எரியும் நெருப்பு பற்றி கவலையில்லை; ஆனால், உக்ரைனில் போர் நடக்கக் கூடாது’’ என்று தெரிவித்தார்.

திருப்பதி லட்டின் புனிதம் மீட்கப்பட்டுவிட்டது: கோயில் அறக்கட்டளை

அதுமட்டுமின்றி, முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி, பாஜக அமைச்சரான பந்தி சஞ்சய் குமாரின் கருத்துகளுக்கு ஒவைசி வியாழக்கிழமையில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஒவைசி “மதரஸாக்களுக்கு எதிராக அவதூறான அறிக்கையை அமைச்சர் வெளியிடுகிறார்; இது அமைச்சரின் மனநிலையைக் காட்டுகிறது.

சுதந்திர இயக்கத்தின்போது, முஸ்லிம்கள் தியாகம் செய்ததுடன், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட அறிவிப்பும் வெளியிட்டனர்.

அவருக்கு இஸ்லாமோபோபியா என்ற நோய் உள்ளது. இந்தியாவில் இஸ்லாமோபோபியாவை ஊக்குவிக்கும் உள்துறை அமைச்சரின் இந்த வெறுக்கத்தக்க அறிக்கையை ஒவ்வொரு இந்தியரும் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

This person is the MOS Home and makes a General sweeping statement against Madarsas it shows the Honourable Minister mindset.
Every Indian should strongly condemn this hateful statement of MOS Home he is encouraging Islamophobia in India. https://t.co/UHxgNTu1Uk

— Asaduddin Owaisi (@asadowaisi) September 19, 2024

வக்ஃப் வாரியம் ஒன்பது லட்சம் ஏக்கர் நிலத்தை வைத்திருப்பதாக ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்டவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இந்து அறக்கட்டளையுடன் கூடிய நிலங்களைப் பற்றி அவர்கள் குறிப்பிடவில்லை.

30,000 மசூதிகள் எங்களுடையவை, முஸ்லிம்களுடையவை அல்ல என்று ஆர்எஸ்எஸ் கூறுகிறது. காசி, மதுரா மசூதிகளை எங்களிடமிருந்து பறிக்க சட்டம் இயற்றப்படுகிறது’’ என்றும் கூறினார்.

தெலங்கானாவில் உள்ள கரீம்நகரில் ஒரு பெண்கள் விடுதி திறப்பு விழாவின் போது, மத்திய உள்துறை இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமார், “சில மதரஸாக்கள் மாணவர்களுக்கு ஏ.கே-47 துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் ஆபத்தான திறன்களைக் கற்பிக்கின்றன. அவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை வளர்க்கின்றனர்.

அவர்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்திய சனாதன கலாசாரம், மரபுகளை ஊக்குவிக்கும் பள்ளிகளுக்கு மாநில அரசு நிதி வழங்காதது அதிருப்தி அளிக்கிறது. கல்விக்கு அர்ப்பணிப்புள்ள ஓர் அமைச்சர்கூட இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது’’ என்று தெரிவித்திருந்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024