வீரர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் தராத பாக். கிரிக்கெட் வாரியம்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 4 மாதங்களாக கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் வீரர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகளவிலான போட்டிகள் இல்லாதது ஆகியவை கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக (ஜூலை-அக்டோபர்) பாகிஸ்தான் வீரர்கள் மாதச் சம்பளத்தைப் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெயர் குறிப்பிடப்படாத ஒரு வீரர் கூறுகையில், “மத்திய ஒப்பந்தங்கள் மற்றும் பணம் செலுத்துவதில் தாமதம் குறித்த குழுவின் முடிவெடுக்காததால் ஒட்டுமொத்த அணியும் எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது. நாங்கள் பொறுமையாக இருந்தோம். ஆனால், அடுத்த மாத ஊதியம் எப்போது வரும் என்று எங்களுக்குத் தெரியாதபோது விளையாட்டில் கவனம் செலுத்துவது கடினம்” என்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதிச்சிக்கல்களுக்கு வீரர்களில் சம்பள விவகாரம் மட்டுமே ஆதாரம் இல்லை. மேலும், வீரர்களின் ஜெர்சியில் ஸ்பான்சர்ஷிப் லோகோக்களுக்கு வாரியம் பணம் செலுத்தவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தாமதங்களின் விளைவாக பங்கேற்பாளர்கள் மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதிநிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.

2026-ஆம் ஆண்டு வரை தொடரும் நோக்கத்துடன் 2023 இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு மைய ஒப்பந்தக் கட்டமைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த ஒப்பந்தத்தில் அதிகரிக்கப்பட்ட ஊதியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மூன்று சதவீத வருமானப் பகிர்வு ஆகியவை அடங்கும்.

அடுத்தாண்டு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ள நிலையில் இந்தச் சம்பள விவகாரம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024