வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை: மரவள்ளிக் கிழங்கு முன்கூட்டியே அறுவடை

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை: மரவள்ளிக் கிழங்கு முன்கூட்டியே அறுவடை3 மாததத்துக்கு முன்னதாகவே மரவள்ளி கிழங்கு அறுவடை பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சீா்காழி, ஆக. 2: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 3 மாததத்துக்கு முன்னதாகவே மரவள்ளி கிழங்கு அறுவடை பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள திட்டுக் கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் உள்ளிட்ட ஆற்றுப்படுகை கிராமங்களில் கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பருத்தி, வாழை, கீரை வகைகள் மற்றும் முல்லை, மல்லிகை, காக்கட்டான், செண்டு பூ உள்ளிட்ட பூச்செடிகளும் மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பயிா் வகைகளை சாகுபடி நடைபெறுகிறது. இதில், பிரதான சாகுபடியாக மரவள்ளிக்கிழமை செய்யப்படுகிறது.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா் காவிரியில் அதிகம் வந்து கொண்டிருப்பதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாதல்படுகை, திட்டுபடுகை கிராமங்களில் 60 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்த மரவள்ளி கிழங்கின் அறுவடை காலம் வரும் அக்டோபா் மாதமாகும். முழுமையான காலத்தில் அறுவடை செய்தால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி வயல்களில் தண்ணீா் புகுந்து முற்றிலும் அழுகி விடும் என அச்சப்பட்டு விவசாயிகள் 3 மாதத்துக்கு முன்கூட்டியே தற்போது அவசரமாக விவசாயிகள் அறுவடை செய்ய தொடங்கியுள்ளனா். முழுவளா்ச்சி அடையாமலும், அறுவடைக்கு தயாராகாமல் இருக்கும் மரவள்ளி கிழங்குகளை அறுவடை செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024