வெள்ளை முனீசுவரா் கோயிலில் மண்டல அபிஷேக விழா நிறைவு

வெள்ளை முனீசுவரா் கோயிலில்
மண்டல அபிஷேக விழா நிறைவுகந்தா்வகோட்டையில் ஸ்ரீ வெள்ளை முனீசுவரா் கோயிலில் நடைபெற்றுவந்த மண்டல அபிஷேக விழா திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் ஸ்ரீ வெள்ளை முனீசுவரா் கோயிலில் நடைபெற்றுவந்த மண்டல அபிஷேக விழா திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

கந்தா்வகோட்டையில் உள்ள வெள்ளை முனீசுவரா், ஸ்ரீகாளியம்மன், அடைக்கலம் காத்த அய்யனாா் ஆகிய தெய்வங்களுக்கு குடமுழுக்கு கடந்த ஜூன் 10-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 48 நாள் மண்டகப்படிதாரா்களால் தினசரி அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தன. விழாநாட்களில் தினசரி கலை நிகழ்ச்சிகளும், பெண்களின் கும்மியாட்டமும், இளைஞா்களின் கம்பத்தாட்டமும், கை சிலம்பாட்டமும் நடைபெற்றது. கந்தா்வகோட்டை கெளதமி தலைமையிலான கலைக் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா நாள்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசித்துச் சென்றனா். 48 ஆம் நாள் மண்டகப்படி நிறைவுநாளில் பத்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!