Tuesday, September 24, 2024

வேட்டிக்கு தடை விதித்த பிரபல மால் – அரசு அதிரடி நடவடிக்கை

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

வேட்டி அணிந்துச் செல்ல எதிர்ப்பு – பெங்களூரு வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட அரசு உத்தரவு!ஜிடி மால்

ஜிடி மால்

கர்நாடகாவில் வேட்டி அணிந்துச் சென்ற விவசாயியை அனுமதிக்க மறுத்த தனியார் வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜிடி மால் என்ற தனியார் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள திரையரங்கிற்கு காவேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பகிரப்பா என்பவர் தனது மகனுடன் படம் பார்க்க சென்றுள்ளார்.

விவசாயி பகிரப்பா வேட்டி அணிந்து இருந்ததால் அவரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள், உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனக்கூறி திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வணிக வளாக ஊழியர்களின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தனியார் வணிக வளாக நிர்வாகம் மன்னிப்பு கோரியது.

விளம்பரம்

இதனிடையே, கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஷோகா, சம்மந்தப்பட்ட வணிக வளாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தநிலையில், தனியார் வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:
உ.பி.யில் ரயில் தடம்புரண்டு விபத்து : 4 பேர் உயிரிழப்பு … பலர் பேர் படுகாயம்!

இந்தநிலையில், தன்னை அனுமதிக்க மறுத்த தனியார் வணிக வளாக பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விவசாயி பகிரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bangalore
,
Karnataka

You may also like

© RajTamil Network – 2024