வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

நடிகர் பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோவை 'வேட்டையன்' படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

'வேட்டையன்' படம் அக்டோபர் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசிலாயோ' பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் மற்றும் ராணா டகுபதி ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை வெளியிட்டது.

அதனை தொடர்ந்து தற்போது, நடிகர் பகத் பாசிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவர் 'பேட்ரிக்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இது தொடர்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவையும் லைகா நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்தநிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

Get ready to enjoy the vibrant energy of #FahadhFaasil as PATRICK in VETTAIYAN ️ Brace yourself for an intriguing character! #Vettaiyan ️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth@SrBachchan@tjgnan@anirudhofficial@LycaProductions… pic.twitter.com/DiZgzWUeH2

— Lyca Productions (@LycaProductions) September 18, 2024

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024