வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ பாடலின் புதிய போஸ்டர் வெளியீடு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

‘மனசிலாயோ’ பாடலின் புதிய போஸ்டரை வேட்டையன் படக்குழு வெளியீட்டுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை படக்குழு பகிர்ந்தது. ஏற்கனவே துஷாரா விஜயன் மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோர் டப்பிங் பணிகளை முடித்துவிட்டனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'மனசிலாயோ' பாடலின் கிளிம்ஸ் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் முதல் பாடலான 'மனசிலாயோ' இன்று மாலை வெளியாக உள்ள நிலையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியீட்டுள்ளது.

Make way for Chettan! #MANASILAAYO from VETTAIYAN ️ is dropping today at 5️⃣ PM. Get ready to groove for the MALTA blend. An @anirudhofficial Musical #MalaysiaVasudevan@singeryugendran@deepthisings ✍ @VishnuEdavan1@soupersubu@SonyMusicSouth… pic.twitter.com/4l6azh5M2F

— Lyca Productions (@LycaProductions) September 9, 2024

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024