வேலூர், சென்னையில் கொளுத்திய வெயில்.. 17 இடங்களில் சதமடித்தது

by rajtamil
0 comment 55 views
A+A-
Reset

சென்னை உள்ளிட்ட ஒருசில இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும், வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை. குறிப்பாக, கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்தது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட ஒருசில இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னை, வேலூர் மற்றும் திருத்தணியில் வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பம் பதிவான இடங்கள் விபரம்;

* வேலூர் – 110.6 டிகிரி பாரன்ஹீட்

* திருத்தணி – 108.5 டிகிரி பாரன்ஹீட்

* மீனம்பாக்கம் -106.7 டிகிரி பாரன்ஹீட்

* ஈரோடு – 105.4 டிகிரி பாரன்ஹீட்

* நுங்கம்பாக்கம் – 104.3 டிகிரி பாரன்ஹீட்

* மதுரை விமான நிலையம் – 103 டிகிரி பாரன்ஹீட்

* மதுரை நகரம் – 104 டிகிரி பாரன்ஹீட்

* புதுச்சேரி – 103.5 டிகிரி பாரன்ஹீட்

* நாகப்பட்டினம் – 101 டிகிரி பாரன்ஹீட்

* கடலூர் – 103.1 டிகிரி பாரன்ஹீட்

* திருச்சி – 103 டிகிரி பாரன்ஹீட்

* தஞ்சாவூர் – 104 டிகிரி பாரன்ஹீட்

* கரூர் பரமத்தி – 103 டிகிரி பாரன்ஹீட்

* நாமக்கல் – 102 டிகிரி பாரன்ஹீட்

* சேலம் – 102 டிகிரி பாரன்ஹீட்

* பரங்கிப்பேட்டை – 102 டிகிரி பாரன்ஹீட்

* திருப்பத்தூர் – 100 டிகிரி பாரன்ஹீட்

You may also like

© RajTamil Network – 2024