Monday, October 14, 2024

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடிய ஊழியர்… என்ன காரணம் தெரியுமா?

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

புதுடெல்லி,

ஒரு தயாரிப்பு வடிவமைப்பாளர் ஊழியர் ஒருவர் அவரது மேலாளரின் நியாயமற்ற கோரிக்கைகள் காரணமாக முதல் நாளிலேயே தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக கூறியுள்ளார். அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

ரெடிட் என்ற தளத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுடைய அனுபவங்களையும் தங்களுடைய கருத்துக்களையும் பதிவிடுவார்கள். அந்த வகையில் ரெடிட் தளத்தில் ஸ்ரேயாஸ் என்ற நபர் தான் வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அந்த வேலையை விட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். அக்டோபர் 7ம் தேதி வேலைக்கு சேர்ந்ததாகவும் தன்னுடைய மேலாளரிடம் அன்றைய தினம் முதல் சந்திப்பு நடைபெற்றது என்றும் தெரிவித்துள்ளார். அப்போது அவர் நேரம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டும், அலுவலக நேரம் தாண்டியும் வேலை செய்ய வேண்டும் என கூறியதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு கூடுதலாக அலுவலக நேரம் தாண்டி செய்யும் வேலைக்கு கூடுதல் ஊதியம் கிடைக்குமா என கேட்டதற்கு அந்த மேலாளர் இல்லை என தெரிவித்தாராம். அதுமட்டுமின்றி

வொர்க் லைப் பேலன்ஸ் என்பதெல்லாம் வெளிநாட்டினருக்குதான் செட் ஆகும் இந்தியாவில் அதற்கெல்லாம் வாய்ப்பு கிடையாது எனக் கூறினாராம். புத்தகம் படிப்பதற்கு, உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் வேண்டும் என இவர் கேட்டபோது அதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாது எனக் கூறினாராம். வேலை தாண்டி தனக்கென தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. நான் புத்தகம் படிப்பேன், உடற்பயிற்சி செய்வேன், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவேன் ஆனால் இந்த நிறுவனத்திற்காகவும் இந்த வேலைக்காகவும் அவற்றையெல்லாம் தியாகம் செய்ய வேண்டும் என என்னுடைய மேலாளர் என்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு டாக்ஸிக்கான பணியிடத்தில் நம்மால் வேலை செய்ய முடியாது என முடிவெடுத்து நான் உடனடியாக என்னுடைய வேலையை ஒரே நாளில் உதறி விட்டு வந்து விட்டேன் என அவர் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு ரெட்டிட் தளத்தில் பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது. ஸ்ரேயாஸின் முடிவுக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அந்த ஊழியரின் முடிவிற்கு பாராட்டு தெரிவித்த ஒரு நபர்,உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார். ற்றொருவர் ராஜினாமா மின்னஞ்சலை தாங்கள் பார்த்தவற்றில் மிகச் சிறந்த ஒன்று என்று பாராட்டி உள்ளார். புனேவை சேர்ந்த இளம்பென் ஒருவர் அதீத பணிச்சுமையால் சமீபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்தும் வகையிலும் ஊழியர்களுக்கு வேலை மற்றும் நேர அட்டவணைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024