ஷகிப் விரலில் அறுவைச் சிகிச்சை..! 2ஆவது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

37 வயதாகும் வங்கதேச வீரர் ஷகிப் 70 டெஸ்ட்டில் 4,600 ரன்கள், 242 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் ஷகிப் ஓவரில் அதிரடியாக ரன்கள் குவித்தார். மோசமாக பந்துவிசீய ஷகிப் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

சிறந்த ஆல்ரவுன்டராக விளக்கும் ஷகிப் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

ஷகிப் விரலில் அறுவைச் சிகிச்சை

முரளி கார்த்தி கூறியதாவது:

எனக்கு ஷகிப்பை பல வருடங்களாகத் தெரியும். அதனால் அவரிடம் சென்று ஏன் சரியாக பந்துவீசவில்லை எனக் கேட்டேன். பந்து வீசும் விரலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். அவரது இடது கை விரலில் செய்யப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சையினால் அந்த விரல்கள் வீங்கியிருந்தன. சில விரல் வளையாமல், நெகிழ்வு தன்மையில்லாமலும் இருந்தது. அதனால் அவரால் பந்தைப் பிடிக்கும்போது எந்த உணர்ச்சிகளையும் பெற முடியவில்லை.

ஒரு சுழல் பந்து வீச்சாளராக உங்களுக்கு அந்த உணர்வு தேவை. ஏற்கனவே, ஷகிப்புக்கு தோள்பட்டை பிரச்னை இருக்கிறது. இந்த இரண்டு காரணங்களால்தான் அவரால் சரியாக பந்துவீச முடியவில்லை என்றார்.

இதையும் படிக்க: கிண்டல்களுக்குப் பதிலளித்த மனு பாக்கர்!

ஷகிப் விளையாடுவார்

இது குறித்து வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹத்துருசிங்க, “ஷகிப் பற்றி எனக்கு எந்த புகாரும் அதிகாரபூர்வமாக வரவில்லை. பிசியோவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஷகிப் 2ஆம் டெஸ்டில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

எனக்கு ஷகிப் செயல்பாடு குறித்து எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால், அணியாக ஒட்டுமொத்தமாக இன்னும் சிறிது நன்றாக விளையாடியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஷகிப்புக்கும் இது தெரியும். அவரால் இதை செய்யவும் முடியும். 2ஆம் இன்னிங்ஸில் அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். எதிரணி அவ்வளவு சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதே உண்மை என்றார்.

வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் ஷண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜோய், ஜகிர் ஹசன், சதாம் இஸ்லாம், மொமினுல் ஹகிவ், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹதி ஹசன் மிர்ஜ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நகித் ராணா, ஹசன் மஹ்முத், டஸ்கின் மஹ்முத், சையித் காலேத் அஹ்மது, ஜாகேர் அலி அனிக்.

Related posts

Indore Utthan Abhiyan:’It’s A Joke To Dilute Condition In Metropolitan Area Tender’

India Jumps 42 Spots In 9 Years, Ranks 39th In Global Innovation Index 2024

5 Rice Alternatives For Diabetic Patients