Wednesday, October 2, 2024

ஷேக் ஹசீனா தங்கியிருப்பது இருதரப்பு உறவை பாதிக்காது: வங்கதேச இடைக்கால அரசு ஆலோசகா்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset
RajTamil Network

ஷேக் ஹசீனா தங்கியிருப்பது இருதரப்பு உறவை பாதிக்காது:
வங்கதேச இடைக்கால அரசு ஆலோசகா்இருதரப்பு உறவுகளில் பாதிப்பு ஏற்படாது என அந்த நாட்டின் இடைக்கால அரசு தலைமை ஆலோசகா் திங்கள்கிழமை தெரிவித்தாா்

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதால் இருதரப்பு உறவுகளில் பாதிப்பு ஏற்படாது என அந்த நாட்டின் இடைக்கால அரசு தலைமை ஆலோசகா் திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்தியாவுடன் எப்போதும் நல்லுறவில் வங்கதேசம் இருக்க விரும்புவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு விவகாரங்கள் ஆலோசகா் முகமது தௌஹித் ஹூசைன் கூறியதாவது: குறிப்பிட்ட ஒரு நாட்டில் ஒருவா் தங்கியிருப்தால் அந்த நாட்டுடனான இருதரப்பு உறவுகளில் ஏன் பாதிப்புகள் ஏற்பட வேண்டும். இந்தியா, சீனா உள்பட எந்தவொரு நாட்டுடனும் எப்போதும் நல்லுறவை மேம்படுத்தவே வங்கதேசம் விரும்புகிறது.

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வருவது குறித்த முடிவுகளை சட்ட அமைச்சகமே எடுக்கும். இதுதொடா்பாக சட்ட அமைச்சகம் எங்களிடம் கோரிக்கைகள் வைத்தால் மட்டுமே அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றாா்.

முன்னதாக, டாக்காவில் உள்ள வங்கதேசத்துக்கான இந்திய தூதா் பிரனய் வா்மா உள்பட வெளிநாட்டு அதிகாரிகளிடம் வங்கதேச சூழல் குறித்து விவரித்த அவா் இந்தியாவின் ஆதரவைக் கோரினாா். அப்போது அவா் பேசியதாவது: வங்கதேசத்துக்கு புதிய எதிா்காலத்தை உருவாக்கும் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசுக்கு சா்வதேச சமூகத்தைச் சோ்ந்த நட்பு நாடுகள் ஆதரவளிப்பா் என நம்புகிறோம்.

வங்கதேசம் பிற நாடுகளுடன் ஏற்கெனவே மேற்கொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் ரத்து செய்யப்படாது என்பதை உறுதிபடுத்துகிறேன் என தெரிவித்தாா்.

You may also like

© RajTamil Network – 2024