Saturday, September 28, 2024

ஹரியாணாவின் பத்தாண்டுகால வலிக்கு காங்கிரஸ் முடிவுகட்டும்: ராகுல்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஹரியாணாவில் பத்தாண்டுகால வலிக்கு அமையவிருக்கும் காங்கிரஸ் அரசு முடிவுகட்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஹரியாணா காங்கிரஸ் தனது விரிவான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில், விவசாயிகளின் நலனுக்கு ஆணையம் அமைப்பது, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 கோடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

படிக்க: அமாவாசைக்குப் பின் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு: ஹர்ஷவர்தன் பாட்டீல்

தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் ஹரியாணா காங்கிரஸ் தலைவர் உதய் பன், எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பத்தாண்டுக் கால ஆட்சியில் ஹரியாணாவின் செழிப்பு, கனவுகள் மற்றும் அதிகாரத்தை பாஜக பறித்துவிட்டது. அக்னிவீர் திட்டத்தில் இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்தது. வேலையில்லாத் திண்டாட்டத்தினால் அனைத்து குடும்பங்களின் மகிழ்ச்சியும் பறிபோனது. பணவீக்கம் பெண்களின் தன்னம்பிக்கையைப் பறித்தது.

படிக்க: கோவை உள்பட18 மாவட்டங்களில் இன்று கனமழை!

கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்க முயன்றார்கள், பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான ஜிஎஸ்டி மூலம் லட்சக்கணக்கான சிறு வணிகர்களின் லாபத்தைப் பறித்தனர். மாநிலத்தின் சுயமரியாதையையும் பாஜக பறித்துள்ளது.

வரவிருக்கும் காங்கிரஸ் அரசு பத்தாண்டு்கால வலிக்கு முடிவுகட்டும். ஒவ்வொரு ஹரியாணா மக்களின் நம்பிக்கை, ஆசை மற்றும் கனவுகளை நிறைவேற்றுவது உறுதி என்றார்.

சேமிப்பிலிருந்து ஆரோக்கியம் வரை, சமூகப் பாதுகாப்புக்கான உரிமைகளைப் பாதுகாத்தல், வேலைவாய்ப்பு என ஒவ்வொரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கிறது என்று அவர் கூறினார்.

ஹரியானாவில் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற்று, அக்டோபர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024