ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மாற்றம்!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

ஹரியாணாவின் சட்டப்பேரவைத் தேர்தல், வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஹரியாணா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 1ஆம் தேதிக்கு பதில் அக்டோபர் 5ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையும் அக்டோபர் 4ஆம் தேதிக்கு பதில் 8ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிஷ்னோய் சமூக மக்கள் கொண்டாடும் 100 ஆண்டுகள் பாரம்பரிய திருவிழா வருவதால், அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று ஹரியாணாவில் தேர்தல் தேதி மாற்றப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

போர்த்துகல்: ஹெலிகாப்டர் விபத்தில் 4 வீரர்கள் பலி, ஒருவர் மாயம்

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா மாநிலத்துக்கான பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அண்மையில் அறிவித்தார். அதில், ஜம்மு -காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாகவும், ஹரியாணாவுக்கு அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாகவும் பேரவைத் தேர்தல் நடைபெறும்.

அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024