ஹரியாணா தேர்தல் பிரசாரத்தில் கேஜரிவால்: சூடுபிடிக்கும் களம்!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

ஹரியாணாவின் ஜகத்ரி தொகுதியில் நடைபெறும் கட்சி பேரணியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சந்தீப் பதக் தெரிவித்தார்.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனை போட்டி நிலவுகிறது.

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

இந்த நிலையில், தேர்தல பிரசாரம் களைக்கட்டி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் நாளை (செப்.20)ல் ஜகத்ரி தொகுதியில் நடைபெறும் பேரணியில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

மேலும் தப்வாலி, ரானியா, பிவானி, மெஹம், கல்யாத், அசாந்த் மற்றும் பல்லப்கர் தொகுதிகள் உள்ளிட்ட 11 மாவட்டகளில் நடைபெறும் 13 நிகழ்ச்சிகளிலும் வரும் நாள்களில் கேஜரிவால் பங்கேற்பார். அவரது அடுத்த பிரசார அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று சந்தீப் கூறியுள்ளார்.

30 வயதுக்கு மேல் உள்ள பெண்களின் கவனத்திற்கு!

கலால் கொள்கை வழக்கில் கடந்த வாரம் திகார் சிறையில் இருந்து விடுதலையான கேஜரிவால் தில்லி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அமைச்சர் அதிஷி முதல்வராக செப்.21ல் பதவியேற்க உள்ளார்.

அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள ஹரியாணாவில் அவர் பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனார். ஹரியாணாவில் காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் முறிவடைந்ததை அடுத்து ஆம் ஆத்மி கட்சி 90 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

ஹரியாணாவில் ஆட்சி மாற்றம், கேஜரிவாலின் மாதிரி ஆட்சியை மாநிலத்தில் கொண்டு வருவதை இலக்காகக்கொண்டு, முழு பலத்துடன் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி தயாராக இருப்பதாகவும் பதக் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024