Monday, October 21, 2024

ஹரியாணா தேர்தல்: 11 மணி நிலவரம்!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 22.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்று வருகின்றது. தேர்தல் மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளது.

தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றுள்ளனா். இவா்களுக்காக 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: மழைப் பொழிவால் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்: 1,500 போ் பாதிப்பு

எதிர்க்கட்சியான காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் ஓரிடத்திலும் களத்தில் உள்ளன. இதுதவிர, ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவையும் மோதுவதால் பலமுனைப் போட்டி நிலவுகிறது.

இருப்பினும், பாஜக, காங்கிரஸ் இடையே முக்கியப் போட்டி நிலவி வருவதாக அரசியல் பார்வையாளா்கள் தெரிவிக்கின்றனர். களத்தில் மொத்தம் 1,031 வேட்பாளா்கள் உள்ளனர்.

இதையும் படிக்க: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மாநிலத்தில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருப்பதால், இம்முறை மக்கள் தங்களுக்கு வாய்ப்பளிப்பா்கள் என்பது காங்கிரஸின் நம்பிக்கையாக உள்ளது.

அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024