ஹரியாணா பேரவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

by rajtamil
Published: Updated: 0 comment 5 views
A+A-
Reset

ஹரியாணா பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் யார்? என்ற விவரம் வெளியாகியுள்ளது.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு அக். 8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், 67 வேட்பாளர்கள் பெயர்கள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று(செப். 4) வெளியிட்டுள்ளது. கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கும் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி லாட்வா தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் இந்தர்ஜித் சிங்கின் மகள் ஆர்த்தி சிங் ராவ் அடேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

கேப்டன் அபிமன்யு, குல்தீப் பிஷ்னோயின் மகன் பாவ்யா பிஷ்னோய், முன்னாள் எம்.பி. சுனிதா டக்கல் ஆகியோரது பெயர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

You may also like

© RajTamil Network – 2024