ஹர்திக் பாண்ட்யா, ரன்வீர் சிங் உற்சாக நடனம்… கவனம் பெறும் வீடியோ….

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

Anant Ambani-Radhika Merchant Wedding: ஹர்திக் பாண்ட்யா, ரன்வீர் சிங் உற்சாக நடனம்… கவனம் பெறும் வீடியோ!ஹர்திக் பாண்ட்யா - ரன்வீர் சிங்

ஹர்திக் பாண்ட்யா – ரன்வீர் சிங்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் உற்சாகத்துடன் நடனமாடினர். இது தொடர்பான வீடியோ ஒன்று அதிக விருப்பங்களை பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகை தந்துள்ளனர்.

விளம்பரம்

திருமண கொண்டாட்டங்கள் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. முக்கிய திருமண சடங்குகள் இன்று (ஜூலை 12) சுப விவா என்றழைக்கப்படும் திருமண விழாவுடன் தொடங்கியுள்ளது.

இந்திய பாரம்பரிய ஆடைகளுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 13ஆம் தேதி சுப ஆசீர்வாத நாளாக இருக்கும். இந்த விழாவிலும் இந்திய பாரம்பரிய ஆடையுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

ஒட்டு மொத்த இந்திய பிரபலங்கள் அனைவரும் மும்பையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக குவிந்துள்ளனர். இந்நிலையில் திருமண கொண்டாட்டத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, நடிகர் ரன்வீர் சிங் உற்சாகத்துடன் நடனமாடி விழாவை வண்ணமயமாக்கினர்.

விளம்பரம்

#WATCH | Bollywood actors and other celebrities at the Anant Ambani-Radhika Merchant wedding ceremony at Jio World Convention Centre in Mumbai pic.twitter.com/Yx9AQi4HOu

— ANI (@ANI) July 12, 2024

விளம்பரம்

ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்திற்கான அனைத்து நிகழ்ச்சிகளும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும். முக்கிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் பாரம்பரிய வேத இந்து சடங்குகளின்படி நடைபெறும்.

இதையும் படிங்க – Anant Ambani-Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஜான்சினாவின் மாஸ் எண்ட்ரி… ட்ரெண்டான வீடியோ!விளம்பரம்

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் உலக வணிகத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Actor Ranveer singh
,
Hardik Pandya

You may also like

© RajTamil Network – 2024