ஹாலிவுட், பாலிவுட் மிகவும் வித்தியாசமானது..! மனம்திறந்த பிரியங்கா சோப்ரா!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து, பாலிவுட், ஹாலிவுட் என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் குடியேறினார்.

திருமணத்துக்குப் பிறகு ஹாலிவுட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக அமெரிக்க படமான லவ் அகெய்ன் படம் வெளியானது.

அடுத்தடுத்த படங்கள்

இதற்கடுத்து ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் படத்தில் நடித்துள்ளார். தி ஃபிளப் படத்தில் 19ஆம் நூற்றாண்டின் கரீபியன் பெண்ணாக நடித்துள்ளார். இந்தப் படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

தற்போது, சிட்டாடல் தொடரின் 2ஆவது சீசன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேக்ஸ் ஃபேக்டர் நிறுவனத்துக்கு 2021-2024 வரை விளம்பரத் தூதராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், தற்போது இந்தியா வந்துள்ளார்.

சமீபத்தில் மும்பைக்கு வந்திருந்த பிரியங்கா சோப்ரா நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசியிருந்தார். அதில் ஹாலிவுட், பாலிவுட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ஏற்கனவே ஊதியம் குறித்து பேசியதும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா கூறியதாவது:

ஒவ்வொரு நாடும் பொதுவாக வித்தியாசமானவை. ஒவ்வொருவரும் அவரவர் கலாச்சாரம் ரீதியிலான முறையில் வேலை செய்கிறோம். ஹாலிவுட், பாலிவுட் சினிமாக்களில் நான் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்க்கிறேன்.

ஹாலிவுட்டில் மிக அதிகமான திட்டமிடல் இருக்கும். படப்பிடிப்பின் ஒரு நாளைக்கு முன்பாக 100 ஈ-மெயில்கள் வரும். நேரம் மிகவும் சரியாக குறிப்பிட்டிருக்கும். சில நேரங்களில் நாம் இரவு எத்தனை மணிக்கு படப்பிடிப்பை முடித்தோம் என்பதைப் பொருத்து மாறும். மற்றபடி மிகவும் சரியாக நேரத்தை திட்டமிட்டு செயல்படுவார்கள். நமக்கு அந்த நேரத்தில் வேறு எதுவும் செய்யமுடியாது.

ஆனால் பாலிவுட்டில் (ஹிந்தி சினிமா துறையில்) நாங்கள் குறைவான செலவில் எதாவது யோசித்து புதியதாக செய்வோம். அப்படி செய்தாலும் குறிப்பிட்ட நேரத்திலும் தேவையானதை செய்துவிடுவோம். சில நேரங்களில் எங்களது சிந்திக்கும் சக்தி இயல்பாகவே நன்றாக இருக்கிறது என நினைக்கிறேன். இது எனக்கு ஹாலிவுட்டில் வித்தியாசமான நடைமுறையாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனி வழி இருக்கும் என்பதை புருந்துகொள்கிறேன். அதைத் தவிர்த்து படப்பிடிப்பு எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024