‘ஹிஸ்புல்லா’ பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி பணம், தங்கம் உள்ளது: இஸ்ரேல் ராணுவம்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

லெபனானில் உள்ள மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய பதுங்கு குழியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்,

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் பலியானார்கள். 250 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது.அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 42 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். ஹமாஸ் இயக்கத்தினரை ஆதரிக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத்தில், காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேல் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதையடுத்து, போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. ஆனால், இஸ்ரேல் அரசோ, ஹமாஸ் இயக்கமோ அதை கேட்கவில்லை. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள் மீது இஸ்ரேல் குறி வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதன் முக்கிய கட்டமாக, பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவிலான நிதியை பதுக்கி வைத்துள்ள பதுங்கு குழியை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறி உள்ளதாவது;

பெய்ரூட்டில் முக்கிய மருத்துவமனையான அல்சஹல் என்ற மருத்துவமனைக்கு நேர் கீழாக பதுங்கு குழி இருக்கிறது. இந்த இடம் ஹசன் நஸ்ரல்லாவின் ரகசிய பதுங்கு குழியாகும். இதில் ஏராளமான தங்கம், பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதன் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,200கோடி). ஆகும். இந்த பணத்தை கொண்டு லெபனானை மறு கட்டமைக்க முடியும்"இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024