ஹூண்டாய் மோட்டார் எக்ஸ்டர் போர்ட்ஃபோலியோவின் கீழ் 2 புதிய வேரியண்ட் அறிமுகம்!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

சென்னை: ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது பிரபலமான நுழைவு நிலை விளையாட்டு பயன்பாட்டு வாகனமான எக்ஸ்டெரில் இரண்டு புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட S(O)+ வேரியண்டின் விலை ரூ.7,86,300 (எக்ஸ்-ஷோரூம்), அதே வேளையில் S+ ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்டின் விலை ரூ.8,43,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

சென்செக்ஸ், நிஃப்டி 1 சதவீதத்திற்கு மேல் சரிவு!

புதிதாக சேர்க்கப்பட்ட வேரியண்ட்களில் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், கலர் டிஎஃப்டி மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளேவுடன் கூடிய டிஜிட்டல் கிளஸ்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவை இதில் அடங்கும்.

புதிய எக்ஸ்டர் வேரியண்ட்டுகளில் 6 ஏர் பேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 71,435 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது 12 சதவிகிதம் சரிந்து 63,175-ஆக உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024