Saturday, September 21, 2024

ஹெட், ஸ்டாய்னிஸ் அதிரடி ஆட்டம்; ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 68 ரன், ஸ்டாய்னிஸ் 59 ரன் எடுத்தனர்.

செயிண்ட் லூசியா,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடர் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் செயிண்ட் லூசியாவில் இன்று நடைபெற்ற 35வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – ஆஸ்திரேலியா அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மெக்முல்லன் 60 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் வார்னர் 1 ரன்னிலும், அடுத்த களம் இறங்கிய மிட்செல் மார்ஷ் 8 ரன், மேக்ஸ்வெல் 11 ரன் எடுத்த நிலையிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து டிராவிஸ் ஹெட் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டிராவிஸ் ஹெட் 49 பந்தில் 68 ரன் எடுத்த நிலையிலும், ஸ்டாய்னிஸ் 29 பந்தில் 59 ரன் எடுத்த நிலையிலும் அவுட் ஆகினர். இதையடுத்து டிம் டேவிட் மற்றும் மேத்யூ வேட் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 68 ரன், ஸ்டாய்னிஸ் 59 ரன் எடுத்தனர்.

You may also like

© RajTamil Network – 2024