ஹேமா கமிட்டி அறிக்கை 5 ஆண்டுகள் தாமதம்: குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசு – காங்.

by rajtamil
Published: Updated: 0 comment 11 views
A+A-
Reset

மலையாள திரையுலகைச் சோ்ந்த பெண்களின் பாலியல் புகாா்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகையொருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகியது.

இந்த நிலையில், கேரள அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிடாமல் மறைத்து வைத்திருந்ததாகவும், இதன்மூலம் குற்றவாளிகளை பாதுகாத்து வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன்.

இந்த அறிக்கையும், அதனுடன் சேர்த்து ஆதாரங்களை உள்ளடக்கிய பென்டிரைவ் ஒன்றும் அரசிடம் 5 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய புலனாய்வுக் குழு அமைத்து கேரள அரசு விசாரணையை முடுக்கிவிடக் கோரியுள்ளார்.

கேரள அரசு தற்போது ஒரு விசாரணைக் குழு அமைத்துள்ளது. ஆனால் இது குறித்த செய்திக் குறிப்பில் ஹேமா கமிட்டி என்ற பெயர் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், இவ்விவகாரத்தில் முழு விசாரணை நடத்த வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் பல நபர்களின் பெயர்களை மறைத்து அதன்பின் வெளியிட அரசு முயற்சித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024