Wednesday, September 25, 2024

ஹைதராபாத் சென்று தந்தையைச் சந்திக்கிறாரா கவிதா?

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிஆர்எஸ் எம்எல்சியான கவிதா இன்று மாலை ஹைதராபாத் வந்து தனது தந்தையைச் சந்திக்க உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கை வழிவகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்றதாக கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையாலும், பின்னர் ஏப்ரலில் சிபிஐயாலும் கைது செய்யப்பட்டார் கவிதா.

நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு!

பின்னர், பல முறை கவிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. எனவே, அவரை விசாரணைக்காகக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் நேற்று(27.7.24) தீர்ப்பளித்தது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை திகார் சிறையிலிருந்து வெளியேவந்த கவிதா தில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தங்கினார். அவரை விமான நிலையத்தில் பிஆர்எஸ் அலுவலர்கள் அவரை வரவேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஐந்து மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த கவிதாவை அவரது கணவர், குழந்தைகள் மற்றும் அவரது சகோதரரும் பிஆர்எஸ் தலைவருமான கே.டி. ராமாராவ் ஆகியோரால் வரவேற்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று மதியம் 2.40-க்கு ஹைதராபாத்திற்கு வந்த தனது தந்தையான முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவைச் சந்திப்பார் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024