Monday, October 21, 2024

ஹைதி நாட்டு கலவரத்தில் 70 பேர் பலி!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஹைதி நாட்டில் கலவரத்தில் 70 பேர் வரையில் பலியானதாக ஐ.நா.வின் மனித உரிமைகளின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கரீபிய தீவு நாடான ஹைதியின் பான்ட்-சோண்டேவில் வியாழக்கிழமையில் (அக். 3) நடந்த கலவரத்தில் 70 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்த கலவரத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளிவரவில்லை.

இருப்பினும், இதுபோன்ற கலவரங்கள் ஹைதி நாட்டில் சாதாரணமானவைதான் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும், தற்போது நடந்த பான்ட்-சோண்டேவில் பகுதிகளில் கலவரம் அசாதாரணமானது என்றும் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள், புதிதாய்ப் பிறந்த குழந்தை உள்பட பலியாகியுள்ளனர். கலவரத்தை ஏற்படுத்திய கும்பல், வன்முறையின் போது 45 வீடுகளுக்கும் 34 கார்களுக்கும் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.

பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தை

இந்த படுகொலையின் பின்னணியில் உள்ள நோக்கம், இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தாக்குதல் நடந்த பகுதிகள் முழுவதும், அந்த கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியைச் சுற்றிலும் காவல் படையை ஹைதி அரசு நிறுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருந்ததால், மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளையும் அரசு அனுப்பியது.

அதுமட்டுமின்றி, இந்த தாக்குதல் ஒட்டுமொத்த ஹைதி நாட்டின் மீதான தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்தது.

இதையும் படிக்க:போருக்கு தயாராகும் இஸ்ரேல்-ஈரான்: என்ன நடக்கும்?

You may also like

© RajTamil Network – 2024