Sunday, September 22, 2024

100 தொகுதிகளில் வெறும் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதா பாஜக?

by rajtamil
Published: Updated: 0 comment 15 views
A+A-
Reset

100 தொகுதிகளில் வெறும் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதா பாஜக.. உண்மை என்ன?பாஜக

பாஜக

இந்தியாவில் கடந்த எப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இதில் பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சி அமைக்கிறது. இதேபோக 234 தொகுதிகளில் வென்று இந்தியா கூட்டணி வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில், பாஜக வெறும் 240 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால் தனி பெரும்பான்மையை இழந்த பாஜக, கூட்டணி கட்சிகளுடன் இணைத்தும் மட்டுமே ஆட்சியை அமைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

விளம்பரம்

இந்நிலையில் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கடும் சரிவை சந்திருப்பதாகவும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெறும் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே 1,587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒடிசாவின், ஜெய்ப்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், 5,34,239 வாக்குகள் பெற்ற நிலையில், 1,587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை தவிர வேறு எந்த பாஜக வேட்பாளரும் மக்களவைத் தேர்தலில் 1,587 வாக்குகளுக்கும் குறைவாக வித்தியாசத்தில் வெற்றிப்பெறவில்லை.

விளம்பரம்

இதையும் படிங்க : எதிர்கட்சி தலைவராக தேர்வாகிறாரா ராகுல் காந்தி..? இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டம்..

இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் 1,615 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மொத்தமாக 7 பாஜக வேட்பாளர்கள் 5,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Congress
,
Parliament
,
Parliament Election 2024
,
Parliamentary election 2024

You may also like

© RajTamil Network – 2024