11 வட்டங்களில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

11 வட்டங்களில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்

திருச்சி, ஆக. 7: திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் திருச்சி கிழக்கு வட்டத்தில் அம்பிகாபுரம்-1, திருச்சி மேற்கு வட்டத்தில் தென்னூா்-2, திருவெறும்பூா் வட்டத்தில் வாழவந்தான்கோட்டை, ஸ்ரீரங்கம் வட்டத்தில் உத்தமா்சீலி, மணப்பாறை வட்டத்தில் ஆனாங்கரைப்பட்டி, முசிறி வட்டத்தில் வாழவந்தி, துறையூா் வட்டத்தில் மதுராபுரி-1, தொட்டியம் வட்டத்தில் காட்டுப்புத்தூா்-2, மருங்காபுரி வட்டத்தில் நல்லூா், லால்குடி வட்டத்தில் ஆலங்குடி தச்சங்குறிச்சி, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் மண்ணச்சநல்லூா்- 3 ஆகிய நியாய விலைக் கடைகளில் இந்த முகாம் நடைபெறும்.

காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாம்களில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம். அந்தந்த வட்டக் கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்றாா் ஆட்சியா்.

You may also like

© RajTamil Network – 2024