Saturday, September 21, 2024

12-வது குழந்தை ரகசியம் குறித்து எலான் மஸ்க் விளக்கம்

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

சமீபத்தில் எலான் மஸ்க் 12-வது குழந்தைக்கு தந்தையானார் என தகவல்கள் வெளியாகின.

வாஷிங்டன்,

உலக பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் வலைதளம், மற்றும் டெக்ஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராகவும் இருந்து வருபவர் எலான் மஸ்க். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்தநிலையில் இவர் தன்னுடைய நிறுவனமான நியூராலிங்க் ஊழியர் ஹிவோன் சிலிசுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ரகசியமாக குடும்பம் நடத்தி வருகிறார்.

3 மனைவிகள் மூலம் 11 குழந்தைகள் பிறந்தன. சமீபத்தில் எலான் மஸ்க் 12-வது குழந்தைக்கு தந்தையானார் என தகவல்கள் வெளியாகின. ஹிவான் சிலிசுக்கு பிறந்த இந்த குழந்தையின் பாலினம் மற்றும் பெயர் விவரம் குறித்து வெளியிடப்படவில்லை.

இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது 12-வது குழந்தையை வரவேற்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதில் எந்த ரகசியமும் இல்லை. எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இது தெரியும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த தகவல் புளூம் வர்க் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024