Thursday, October 31, 2024

16 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண்..! காதலி கொலையில் திடீர் திருப்பம்!

by rajtamil
Published: Updated: 0 comment 8 views
A+A-
Reset

தென் கொரியாவில் 16 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண் கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பெண் கொலை

தென் கொரியாவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் காணாமல் போன நிலையில், ஒருவர் அந்தப் பெண்ணைக் கொன்று, அவரது உடலை சிமென்ட் அடியில் மறைத்து வைத்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தென் கொரியாவுக்கு தெற்கு நகரமான ஜியோஜியில் உள்ள தனது குடியிருப்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர், அவரது காதலியை ஒரு மழுங்கியப் பொருளால் தாக்கியதாக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அவர் தாக்கியதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணின் உடலை ஒரு சூட்கேஸில் வைத்த அவர், அதை அவர் தனது வீட்டின் பால்கனியில் செங்கல் மற்றும் சிமென்ட் தளத்தின் கீழே புதைத்துள்ளார்.

ரஷிய ஆயுதங்களின் 60% பாகங்கள் சீனாவில் தயாரானவை: உக்ரைன்!

வீட்டு பராமரிப்பு பணி

இத்தனை ஆண்டுகளாக யாருக்கும் தெரியாத வகையில் இருந்த இந்தக் கொலை சம்பவம் கடந்த மாதம் வீட்டு பராமரிப்பு பணிகளுக்காக, பால்கனியில் துளையிடும் போது தெரியவந்துள்ளது.

சூட்கேஸில் இருந்த உடல், கைரேகை ஆய்வின் மூலம் காணாமல்போன பெண்ணின் உடல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அந்தப் பெண் இறந்தது தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை செய்த நபரை காவல்துறையினர் 'ஏ' என்று குறிப்பிட்டுள்ளனர். இறந்தப் பெண்ணின் உடலை கண்டுபிடிக்கும் போது கொலையாளி அந்த வீட்டில் வசிக்கவில்லை. இருப்பினும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர்.

திருப்பதியில் 4 நாள்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை!

வாக்குமூலம்

இதுகுறித்து கொலையாளி காவல்துறை அதிகாரிகளிடம் கூறுகையில், “ஜியோஜியில் உள்ள ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 5 ஆண்டுகளாக அந்தப் பெண்ணுடன் வசித்து வந்ததாகவும், 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மழுங்கிய பொருளால் தாக்கியதாகவும், உயிரிழந்த அவரை சூட்கேஸில் போட்டு மூன்றாவது மாடி பால்கனியில், செங்கற்கள் மற்றும் சிமென்ட் அடுக்கின் கீழ் புதைத்ததாகவும்” அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், கொலையாளி 2016 ஆம் ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு முன்பு, அவர் 8 ஆண்டுகள் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்துள்ளார். அதன் பின்னர் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் அந்தக் கட்டடத்தை ஸ்டோர் ரூம்மாக (பொருள் சேமிப்பு அறை) மாற்றியுள்ளார்.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

பெண்ணை மறந்த பெற்றோர்

அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பெண்ணுக்கு 30 வயதாக இருந்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண் இறந்து மூன்று ஆண்டுகள் வரை அவரது குடும்பத்தினர் அவர் காணாமல் போனது பற்றி எந்தத் தகவலும், புகாரும் அளிக்கவில்லை.

கொலை செய்யப்பட்ட பெண், கொலையாளியுடன் சென்றுவிட்டதால் பெண்ணின் பெற்றோர் மகளுடனான தொடர்பை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு கட்டடத்தின் உரிமையாளர் பராமரிப்பு பணிகளுக்காக வீட்டை சுத்தப்படுத்திய போது 16 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆளுநர் ஆர். என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: காங்கிரஸ்

You may also like

© RajTamil Network – 2024