கேப்டனாக எம்.எஸ். தோனி களமிறங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சி.எஸ்.கே. நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை,
இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி அறிமுகம் 17 ஆண்டுகளுக்கு முன்பு (செப்டம்பர் 14ந் தேதி) தொடங்கியது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் டைம் சிறந்த வீரர்கள் என்ற பட்டியலை எடுத்தால், அதில் தோனி முதன்மையான இடத்தைப் பெறுவார். 43 வயதான தோனி, பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் தலைமைத் திறன்களுக்கு பெயர் பெற்றவர் ஆவார்.
டிசம்பர் 2004ம் ஆண்டு வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். பின்னர், 2007ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐ.சி.சி. கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் மூன்று ஐ.சி.சி. கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இந்நிலையில் கேப்டனாக எம்.எஸ். தோனி களமிறங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
The of Captain Cool, Since'0⃣7⃣ #WhistlePodu#17YearsofCaptainCoolpic.twitter.com/DLF9l5lzGN
— Chennai Super Kings (@ChennaiIPL) September 14, 2024