19 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை: ஆயுஷ் பதோனி

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

19 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை என இந்திய வீரர் ஆயுஷ் பதோனி தெரிவித்துள்ளார்.

தில்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டின் புதிய சாதனைகள்!

சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் பதோனி அதிரடியாக 55 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 19 சிக்ஸர்கள் அடங்கும்.

இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார்.

இவர்தான் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர்: ஜாண்டி ரோட்ஸ்

இந்த நிலையில், 19 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை என ஆயுஷ் பதோனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துகளை சரியாக டைமிங் செய்து ஷாட்டுகளை விளையாடினேன். ஒரே இன்னிங்ஸில் 19 சிக்ஸர்கள் விளாசுவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. கடினமான ஷாட்டுகளை விளையாடாமல் பந்துகளை நன்றாக டைம் செய்து விளையாடினேன். ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் குறித்து எதுவும் நினைக்கவில்லை. தில்லி பிரிமீயர் லீக்கில் அணியின் கேப்டனாக எனது அணிக்கு வெற்றி பெற்றுத்தர வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். ஐபிஎல் தொடரில் விளையாடியது தில்லி பிரீமியர் லீக்கில் விளையாடுவதை மிகவும் எளிமையாக்கியது என்றார்.

You may also like

© RajTamil Network – 2024