Saturday, September 21, 2024

2வது டெஸ்ட்: ஹோல்டர் அரைசதம்….வெஸ்ட் இண்டீஸ் 144 ரன்களில் ஆல் அவுட்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார்.

கயானா,

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீசின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத தென் ஆப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். முதல் இன்னிங்சில் வெறும் 54 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு சுருண்டது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராத்வேட் 3 ரன், கீசி கார்டி 26 ரன், அலிக் அத்தானாஸ் 1 ரன், கவேம் ஹாட்ஜ் 4 ரன், ஜோசுவா டா சில்வா 4 ரன், குடாகேஷ் மோதி 11 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 28.2 ஒவர்களில் 7 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஜேசன் ஹோல்டர் 33 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 144 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 54 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 16 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024