2 தொழிலதிபர்களுக்காக மட்டும்தான் அரசு இயங்குகிறது: ராகுல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கவில்லையெனில், அரசுக்கு இந்தியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில், ராகுல் காந்தி தலைமையில் ஜே.கே. ரிசார்ட் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது, “இந்திய வரலாற்றில் ஒருபோதும் ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்தை பறித்துவிட்டு, அதனை யூனியன் பிரதேசமாக நாங்கள் மாற்றியதில்லை.

மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க பாஜக தவறினால், இந்தியா கூட்டணி மக்களவை, மாநிலங்களவை முதல் வீதிகள் வரையில் இறங்கி, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். உள்ளூர் மக்களை ஓரங்கட்டி, லெப்டினன்ட் கவர்னர் மூலம் வெளியாள்களுக்கு பயனளிக்கும் வகையில், மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது அவசியம். அது உங்கள் உரிமை; அதுதான் உங்கள் எதிர்காலம்.

LIVE: Public Meeting | Jammu, Jammu & Kashmir https://t.co/4MjMbkM26m

— Rahul Gandhi (@RahulGandhi) September 25, 2024

நாடு முழுவதும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை அரசு நடத்துகிறது. உண்மையில், இந்த அரசு இரண்டு தொழிலதிபர்களுக்காக மட்டும்தான் இயங்குகிறது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள், இந்த நிறுவனங்களுக்குதான் சாதகமான கருவிகளாக உள்ளன.

அவர்கள் கூறும் மேக் இன் இந்தியா முன்முயற்சியானது, உண்மையில் மேக் இன் அதானி என்றுதான் அழைக்கப்பட வேண்டும். ஏனெனில், பெரும்பாலான ஒப்பந்தங்கள் அதானிக்குதான் வழங்கப்படுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை புகார்: மலையாள நடிகர் எடவேல பாபு கைது!

You may also like

© RajTamil Network – 2024