20 ஆண்டுகளுக்குப் பிறகு செஸ் ஒலிம்பியாட் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக இந்திய வீராங்கனை டி.ஹரிகா தெரிவித்துள்ளார்.
ஹங்கேரியில் நடைபெற்று வந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி இரண்டுமே தங்கம் வென்று அசத்தின.
செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் இந்திய அணிகள் தங்கம் வென்றுள்ளது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன், இந்திய ஆடவா் அணி இரு முறையும் (2014, 2022), மகளிா் அணி ஒரு முறையும் (2022) வெண்கலம் பதக்கம் வென்றுள்ளன.
ஷுப்மன் கில்லுடன் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைய காரணம் என்ன? ரிஷப் பந்த் பதில்!
20 ஆண்டுகளுக்குப் பிறகு வென்றதில் மகிழ்ச்சி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தனது நீண்டகால கனவு நனவாகியுள்ளதாக இந்திய வீராங்கனை டி.ஹரிகா தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனது செயல்பாடுகள் திருப்தியளிக்க வில்லையென்றாலும், அணி சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் உள்ள மற்ற வீரர், வீராங்கனைகளைக் காட்டிலும் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வெல்வதற்காக 20 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். இறுதியில், செஸ் ஒலிம்பியாட்டில் சாம்பியன் பட்டம் வென்று தங்கப் பதக்கத்தை பார்த்துவிட்டேன்.
அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்
நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது. இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் எனது செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லாதபோதிலும், அணியாக தங்கப் பதக்கம் வென்றது மற்ற அனைத்தையும் மறக்கச் செய்தது. சில பின்னடைவுகளுக்குப் பிறகு வலிமையாக மீண்டு வந்து தங்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
கடந்த முறை சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.