முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள்கள் பயணமாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்துள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சியில் 3.94 ஏக்கா் பரப்பளவில் ரூ.114.16 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை இன்று(நவ. 5) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதைத் தொடர்ந்து, கோவையைச் சேர்ந்த பல்வேறு தங்கநகைத் தயாரிப்பாளர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது பணியிடங்களுக்கு நேரில் சென்று கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்பட்டுவரும் தொழிலாளர் தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபின் காரில் ஏறிச் செல்லும் முன், செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “2026-இல் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை மக்கள் அளித்துள்ள வரவேற்பு மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. மீண்டும் 2026-இல் திமுகதான் ஆட்சி என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் மக்களின் வரவேற்பு இருந்தது.
தங்க நகை தொழில் பூங்கா அமைக்கும் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது” என்றார்.
இதையும் படிக்க:4 கிலோ மீட்டரைக் கடக்க ஒரு மணி நேரம்.. பெருமிதத்தில் முதல்வர்