Friday, September 20, 2024

2026 சட்டமன்ற தேர்தல்: திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது.

சென்னை,

2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இந்த குழுவினர் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 5 பேரும் அண்ணா அறிவாலயத்தில் கூடி அடுத்து என்னென்ன பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர். வர இருக்கும் 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய தி.மு.க. தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள இருக்கிறது. இதன் காரணமாக ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற இருக்கிறது.

You may also like

© RajTamil Network – 2024